ராம்சர் பட்டியலில் மேலும் 2 இடங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் இருந்து 13 இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-01-31 12:39 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் உள்ள லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் காப்பகம் என மேலும் இரண்டு இடங்கள் தமிழ்நாட்டில் இருந்து ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். 2022-ம் ஆண்டில் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து 13 இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவிலேயே அதிகமாக 16 ராம்சர் தலங்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் தொடர்ந்து செலுத்தி வரும் அக்கறைக்கான சான்றாக இச்சாதனை விளங்குகிறது. தமிழ்நாடு இத்தகைய உலக அங்கீகாரம் பெற உழைத்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்