கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் மேலும் 2 அம்மன் சிலைகள் கண்டெடுப்பு
கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் மேலும் 2 அம்மன் சிலைகள் கண்டெக்கப்பட்டது;
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு கடற்கரை ஓர மணலில் இரண்டு பெருமாள் சிலைகள் மற்றும் ஒரு அம்மன் சிலை என மூன்று சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலைகளை புதுப்பட்டினம் போலீசார் மற்றும் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் கைப்பற்றி சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று மேலும் இரண்டு சிலைகள் அதே கடற்கரையில் இருப்பதாக தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் மற்றும் புதுப்பட்டிணம் போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு 3 அடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை மற்றும் 2 அடி உயரத்தில் ஒரு அம்மன் சிலை என இரண்டு சிலைகள் இருந்தது. இந்த 2 சிலைகளையும் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடற்கரை மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது. யார் இங்கு கொண்டு வந்து குறிப்பாக போட்டார்கள், எதற்காக போட்டார்கள் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.