அனுமதி இன்றி செயல்பட்ட 2 மதுபான பார்களுக்கு 'சீல்'
முத்தையாபுரம் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்ட 2 மதுபான பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் வடக்கு தெரு மற்றும் ஸ்பிக்நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அருகில் உள்ள 2 பார்கள் அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த அந்த 2 பார்களையும் தாசில்தார் பிரபாகரன் தலைமையில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ், வருவாய்த்துறை ஆய்வாளர் சரவணவேல்ராஜ், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் ஆகியோர் நேற்று இரவு பூட்டி 'சீல்' வைத்தனர்.