தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம் - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்

தமிழகத்தில் இதுவரை 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.;

Update:2022-05-21 21:20 IST
தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம் - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உழவர் நலம் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் குடும்ப அட்டையில் இருந்து உயிரிழந்தவர்களின் 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும் புதிதாக 11 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

உணவுப் பொருள் வழங்கல்துறையில், முதல்-அமைச்சர் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் ரூ.2,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த ஆண்டு 35.35 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி தரப்பட்டுள்ளதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்