கார் கவிழ்ந்து 2 பேர் பலி

நெல்லை அருகே நள்ளிரவில் கார் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.;

Update: 2023-07-05 20:22 GMT

நெல்லை அருகே நள்ளிரவில் கார் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.

கார் கவிழ்ந்தது

நெல்லை-நாகர்கோவில் சாலையில் நேற்று நள்ளிரவில் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. இதில் சுமார் 10 பேர் பயணம் செய்தனர். நெல்லை அருகே பொன்னாக்குடி பகுதியில் சென்ற போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

2 பேர் பலி

காரில் உயிருக்கு ேபாராடியவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். எனினும் இந்த கோர விபத்தில் காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். 8 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 2 பேரின் உடல்களும் அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருமண வீட்டிற்கு...

தொடர்ந்து காரில் வந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியைச் சேர்ந்த சாமித்துரை (வயது 38), பிரவீன் (19), கண்ணன், முத்துக்குமார், நவீன், ஜான்சன் பிரபு, பத்திரகாளி உள்பட 10 பேர் ஒரு காரில் நாங்குேநரி அருகே உள்ள முதலைகுளத்தில் நடந்த ஒரு திருமண வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து நள்ளிரவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை நவீன் ஓட்டினார்.

நெல்லை அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாமித்துரை, பிரவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானதும், மற்ற 8 பேர் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்