காரில் கடத்தப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல்

காரில் கடத்தப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-22 19:10 GMT

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் மற்றும் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருச்சி கோணக்கரையில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த காரில் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த முகமது நிம்தியாஸ் (வயது 23), சரத் என்ற ரத்தினசாமி (23) என்பது தெரியவந்தது. இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்