மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள பரணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் நேற்று பெரியகருக்கை பிரிவு பாதை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மேலத்தெருவை சேர்ந்த ராமலிங்கம் (70) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.