தீயில் எரிந்து 2 குடிசை வீடுகள் நாசம்

வலங்ைகமான் அருகே தீயில் எரிந்து 2 குடிசை வீடுகள் நாசமடைந்தன

Update: 2022-08-22 17:47 GMT

வலங்கைமான்;

வலங்கைமான் அருகே உள்ள நாகங்குடி பெரிய தெருவை சேர்ந்தவர்கள் சிவா(வயது35), வீரையன்(48). இவர்கள் இருவரது குடும்பத்தினரும் அருகருகே ஓலைக்குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் 2 குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றனர். அப்போது சிவா, வீரையன் ஆகிய இருவரின் வீடுகளும் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இருப்பினும் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. கூரை வீடுகளில் எப்படி தீப்பிடித்தது என வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்