வில்லாபுரம் பகுதியில் மின்னல் தாக்கி 2 வீடுகள் சேதம்
வில்லாபுரம் பகுதியில் மின்னல் தாக்கி 2 வீடுகள் சேதமடைந்தது.;
மதுரை வில்லாபுரம் அகத்தியர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணிமாறன் - பாண்டிமீனா தம்பதியினர் ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வருகின்றனர்.அவரது வீட்டின் அருகே சகோதரர் வழிவிட்டான் மனைவி மகாலட்சுமி, 2 மகளுடன் வசித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த நிலையில் மதுரை வில்லாபுரம் பகுதியில் அருகே உள்ள இவர்களது 2 வீட்டின் கான்கிரீட் மேற்கூரையில் திடீரென்று மின்னல் தாக்கியது.இதில் கான்கிரீட் சுவர் உடைந்து வீட்டுக்குள் விழுந்தன. நல்லவேளை வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் மீது கற்கள் விழவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.