வாலிபர் கொலையில் 2 நண்பர்கள் கைது
குரும்பூர் அருகே வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர் கொலை
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28). இவர் தனது நண்பர்கள் சிலருடன் கடந்த 28-ந் தேதி திருச்செந்தூருக்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்து ஆறுமுகநேரியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அப்போது, அவர்கள் மதுக்குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் விக்னேஷ், நண்பர்களான தூத்துக்குடி பூபாலராயபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (28), ராமலட்சுமணன் (24) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் குரும்பூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதிக்கு வந்தார். அங்கு வைத்து 3 ேபரும் மதுஅருந்தியதாக கூறப்படுகிறது.
இதில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராேஜஷ், ராமலட்சுமணன் ஆகியோர் சேர்ந்து, விக்னேஷை மதுபாட்டில், கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
2 பேர் கைது
இதுகுறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற 2 பேரை தேடிவந்தனர். இந்த நிலையில் ராஜேஷ், ராமலட்சுமணன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.