முயல் வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்

முயல் வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2023-08-16 18:42 GMT

கரூர் மாவட்டம், சிங்கம்பட்டி அருகே உள்ள வையமலை பாளையம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படி வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் குளித்தலை அருகே உள்ள தொட்டியாபட்டி பகுதியைச் சேர்ந்த குமார், தொண்டமாங்கினத்தை சேர்ந்த சிவசக்தி என்பதும், மேற்கண்ட வனப்பகுதியில் முயல் மற்றும் 14 அணில்களை வேட்டையாடி எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த முயல் மற்றும் அணில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வனவிலங்குகளை வேட்டையாடியதாக குமார், சிவசக்தி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் வசூல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்