69 பயனாளிகளுக்கு 2¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்

நாகையில் நடந்த சுதந்திர தின விழாவில் 69 பயனாளிகளுக்கு 2¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.;

Update: 2023-08-15 18:45 GMT


நாகையில் நடந்த சுதந்திர தின விழாவில் 69 பயனாளிகளுக்கு 2¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

சுதந்திரதின விழா

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் 77-வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்குடன் திறந்த ஜீப்பில் சென்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 121 பேருக்கு பதக்கம், நினைவுப்பரிசு, ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிக்கு ரூ.51 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண நிதியுதவியையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.34 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகையினையும், மகளிர் திட்டம் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.66 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வங்கி இணைப்பு கடனுதவியையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வங்கி கடனுதவியையும் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.70 ஆயிரத்து 786 மதிப்பில் இலவச பித்தளை தேய்ப்பு பெட்டி மற்றும் இலவச தையல் எந்திரமும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 95 ஆயிரத்து 94 மதிப்பில் தொழில் தொடங்குவதற்கான இணைய மானிய நிதியையும் வழங்கினார்.

மேலும் பல்வேறு நலத்துறை சார்பில் ெமாத்தம் 69 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரத்து 500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) முத்துகுமாரசாமி, கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், நாகை மாலி எம்.எல்.ஏ., தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்