கொளப்பாக்கம் ஊராட்சியில் ரூ.2½ கோடியில் சிமெண்டு சாலை

கொளப்பாக்கம் ஊராட்சியில் ரூ.2½ கோடியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2023-04-17 07:06 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சியில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையின்போது பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் அந்த பகுதிகளில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் சி.எம்.டி.ஏ. நிதியின் கீழ் ரூ.2½ கோடி மதிப்பீட்டில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது. மேலும் மழைநீர் தேங்கும் வகையில் தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் எல்லாம் புதிய சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மேக்ஸ்வர்த் நகர், சீனிவாசா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிதாக சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புதிய சாலை அமைக்கும்போது குறுகலாகவும், ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றாமல் சாலை பணிகள் நடைபெறக்கூடாது என ஊழியர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. சாலை அமைக்கும் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் மாலதி ஏசுபாதம், ஒன்றிய கவுன்சிலர் ஏசுபாதம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்