ரூ.2½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
ரூ.2½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
திருமருகல் ஒன்றிய பகுதியில் ரூ.2½ கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கலெக்டர் ஆய்வு
திருமருகல் ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் பனங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி, கீழசகடமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருச்செங்காட்டாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஏனங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தலா ரூ.26 லட்சத்தில் 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து திருமருகல் ஒன்றியம் பனங்குடி, கட்டுமாவடி, திருமருகல், போலகம், திருகண்ணபுரம், வாழ்குடி, கீழ்வேளூர், வெங்கிடங்கால், குருகத்தி, தேவூர் ஊராட்சிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களை அவர் பார்வையிட்டார்.
ரூ.2½ கோடி மதிப்பில்...
இதேபோல் சாட்டியகுடி,கொளப்பாடு, கீழையூர், எட்டுக்குடி ஊராட்சிகளில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதையும், திருப்பூண்டி வடக்கு ஊராட்சியில், வடக்கு பொய்கைநல்லூர், அக்கரைப்பேட்டை ஊராட்சிகளில் ரூ.2 கோடியே 36 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் அவர் ஆய்வு செய்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.