ரூ.2¼ கோடியில் மேம்பாலம் கட்டும் பணி
பொய்குணம்-ஜவுளிகுப்பம் சாலையில் ரூ.2¼ கோடியில் மேம்பாலம் கட்டும் பணியை உதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;
சங்கராபுரம்
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொய்க்குணம் ஊராட்சியில் பொய்க்குணம்-ஜவுளிக்குப்பம் செல்லும் சாலையில் ரூ.2 கோடியே 27 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமை தாங்கி மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணியை தொடங்கி வைத்தார். தொடா்ந்து பொய்க்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் சமையல் கூடத்தை திறந்து வைத்தும், பொய்க்குணம் மற்றும் ஜவுளிகுப்பம் கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தலா ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தும், ஜவுளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை திறந்து வைத்தும் பேசினார். இதில் சங்கராபுரம் ஒன்றியக்குழு தலைவர் திலகவதிநாகராஜன், உதவி செயற்பொறியாளர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அய்யப்பன், செல்வகணேஷ், ஊராட்சி மன்ற தலைவர் அன்பு அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.