மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் செத்தன

திருவெண்ணெய்நல்லூரில் மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் செத்தன;

Update: 2022-11-11 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் காந்திக்குப்பம் வள்ளுவர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 49). இவர்  நேற்று முன்தினம் மதியம் 12.30 மணி அளவில் அங்குள்ள கால்நடை மருத்துவமனைக்கு அருகே உள்ள வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை பாசுமாடுகள் மிதித்ததால் மின்சாரம் தாக்கி அவைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்