2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.;

Update: 2022-07-21 19:44 GMT

மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் சுடலைமாடசாமி கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலுக்குள் புகுந்த மர்மநபர் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த தளவாய் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல் நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் உள்ள ஈசுவரி அம்மன்கோவிலில் மர்மநபர் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்த கோவில் நிர்வாகி செல்லப்பாண்டியன், முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்