சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 2 சிறுவர்கள் போக்சோவில் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 2 சிறுவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
லால்குடி அருகே பூவாளூர் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (வயது 22). இவர் 16 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதனையடுத்து நவீனை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 சிறுவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.