மெக்கானிக் கடையில் திருடிய 2 சிறுவர்கள் கைது

மெக்கானிக் கடையில் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-07-25 19:54 GMT

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வி.கைகாட்டி நால்ரோடு பகுதியில் மெக்கானிக் கடை வைத்திருப்பவர் கார்த்திகேயன்(வயது 30). இவர் தனது சொந்த வேலை காரணமாக கடந்த 4 மாதமாக மெக்கானிக் கடையை நடத்தாமல் கடையை பூட்டிவிட்டு, தனது சொந்த ஊரில் இருந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அந்த கடைக்குள் புகுந்த 2 ேபர் அங்குள்ள பொருட்களை திருடிக் கொண்டிருந்தனர். இதையறிந்த அந்த இடத்தின் உரிமையாளர் சாமிதுரை, திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து விக்கிரமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,அவர்கள் சேலத்தார்காடு பகுதியை சேர்ந்த 16 மற்றும் 14 வயதுடைய 2 சிறுவர்கள் என்பதும், 'ஸ்பேனர்'களை திருடியதும் தெரியவந்தது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்