திருட்டு வழக்கில் 2 பேர் கைது
திசையன்விளையில் திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை மன்னார்புரம் ரோடு ஏரந்தை விலக்தில் தார் பிளாண்ட் உள்ளது. அங்கிருந்த அலுமினிய தகடுகள் திருடு போனதாக திசையன்விளை போலீசில் முத்துராமலிங்கம் என்பவர் புகார் செய்தார். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து, ஆயன்குளத்தை சேர்ந்த ராஜதுரை (வயது 32), தலைவன்விளையை சேர்ந்த சக்திவேல் (24) ஆகியோரை கைது செய்தார்.