ரூ.26 லட்சம் மோசடி வழக்கில் 2 பேர் கைது

குற்றாலம் அருகே ரூ.26 லட்சம் மோசடி வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-17 19:00 GMT

தேவகோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). கோவில்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் சாமி (49). இவர்கள் குற்றாலம் அருகே உள்ள நன்னகரத்தைச் சேர்ந்த நாகூர் மீரான் (49) என்பவரிடம் ரூ.13 கோடி வட்டிக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு நாகூர் மீரான் உள்பட 5 பேர் முன் பணமாக ரூ.26 லட்சம் கொடுத்தால் ரூ.13 கோடி வாங்கி தருவதாக கூறினார். இதைத் தொடர்ந்து ராஜேந்திரன், பெருமாள்சாமி ஆகியோர் சேர்ந்து ரூ.26 லட்சம் நாகூர் மீரானிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ரூ.13 கோடி கேட்டதற்கு தருவதாக கூறி நாகூர் மீரான் காலம் தாழ்த்தினார். நீண்ட நாட்களாக பணம் கிடைக்காததால் குற்றாலம் போலீசில் ராஜேந்திரன், பெருமாள் சாமி ஆகியோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நாகூர் மீரான் மற்றும் இலஞ்சியை சேர்ந்த மணிகண்டன் (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த ஒரு பெண் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்