வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய 2 பேர் கைது
வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய 2 பேர் கைது;
காரைக்குடி
காரைக்குடி கீழ ஊரணி பகுதியில் இரு வாலிபர்கள் கையில் நீண்ட வாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் காரைக்குடி கொரட்டியார் வீதியை சேர்ந்த சூரிய பிரகாஷ்(வயது 23), தங்கசாமி(22) என தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.