விபத்துக்குள்ளான வேன்களில் இருந்து டயர் திருடிய 2 பேர் கைது

விபத்துக்குள்ளான வேன்களில் இருந்து டயர் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-13 18:49 GMT

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 சரக்கு வேன்கள் மோதியதில் 4 பேர் பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விபத்தில் சிக்கிய 2 வேன்களையும் தென்னிலை போலீசார் அப்புறப்படுத்தி சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அந்த வழியாக சென்ற தருமபுரி மாவட்டம், குண்டு பெருமாள் கோவிலை சேர்ந்த அசோக் குமார் (வயது 30), இவரது நண்பர் மதியோன்பாளையத்தை சேர்ந்த ராகவன் (29) ஆகியோர் விபத்துக்குள்ளான வேன்களில் இருந்த ஜாக்கி மற்றும் டயர்களை திருடிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது க.பரமத்தி இன்ஸ்பெக்டர் முருகேசன் ரோந்து பணியில் சென்று கொண்டிருந்தபோது இவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தார். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் தென்னிலை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது விபத்துக்குள்ளான வேன்களில் இருந்து டயர் உள்ளிட்டவைகளை திருடியதை ஒப்பு கொண்டனர். இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்