9 ஆடுகளை திருடி காரில் கடத்திய 2 பேர் கைது

9 ஆடுகளை திருடி காரில் கடத்திய 2 பேர் கைது

Update: 2022-10-06 18:45 GMT

வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தோப்புத்துறையில் 15 ஆடுகள் திருட்டு போனதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதைத்தொடர்ந்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர் பசுபதி, மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தோப்புத்துறை வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் காரில் 9 ஆடுகள் இருந்தது தெரியவந்தது. பின்னர் காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சென்னை திருவான்மியூரை சேர்ந்த காசிம்(வயது33), மோத்திபாபு(43) என்பதும், வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு விற்பதற்காக ஆடுகளை திருடி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்த 9 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஆடு திருட்டு ெதாடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்