ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்படடனர்

Update: 2022-09-27 21:37 GMT

நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் போலீசார் நேற்று சங்கரன்கோவில் - கழுகுமலை ரோட்டில் பாட்டத்தூர் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மினி லாரி மற்றும் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசியை கடத்தி வந்த 2 பேர் சிக்கினர். சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்த ஐசரி பாலன் என்ற மூர்த்தி (வயது 43), முல்லை நகரை சேர்ந்த பூதத்தான் என்ற பாபு (25) இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஒரு கார்், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்