புதுச்சேரியில் இருந்து நெய்வேலிக்குமதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

புதுச்சேரியில் இருந்து நெய்வேலிக்கு மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-05-28 18:45 GMT

மந்தாரக்குப்பம், 

நெய்வேலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது தலைமையிலான போலீசார் வடக்குத்து ஆயிப்பேட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் பையுடன் வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி, பையை சோதனையிட்டனர். அப்போது பையில் 90 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நெய்வேலி ஆயிப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் மகன் இளங்கோவன் (வயது 41), செல்வராசு மகன் மணிகண்டன் (36) ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்