மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

மது பாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-03-16 18:03 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் தா.பழூர் அருகே உள்ள கண்டியன்கொல்லை பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தென்னவநல்லூர் கீழத்தெருவை சேர்ந்த வடிவேல்(வயது 42) என்பவர் அரசு மதுபான கடையிலிருந்து மொத்தமாக 46 மது பாட்டில்கள் வாங்கிச்சென்றது தெரியவந்தது. அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா முல்லங்குடி குமார் மகன் மணிமாறன்(32) என்பவர் மொத்தமாக வாங்கி வந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இருவரும் தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்