டாஸ்மாக் பார் ஊழியரை வெட்டிய 2 பேர் கைது
மதுரையில் டாஸ்மாக் பார் ஊழியரை வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை விரகனூர் கீழத்தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 40).இவர் அனுப்பானடியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இந்த பாருக்கு ராஜன்மாநகர் கண்மாய் கரையைச் சேர்ந்த ஆசைமணி (24), மூர்த்தி ஆகியோர் மது அருந்த சென்றனர். அவர்கள் போதையில் அங்கு தகராறு செய்தனர்.அதனை சப்ளையர் வினோத்குமார் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும் அரிவாளால் அவரை வெட்டினர்.இதில் காயம் அடைந்த வினோத்குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி, ஆசைமணி ஆகியோரை கைது செய்தனர்.