காரில் மதுபானம் விற்ற 2 பேர் கைது:285 பாட்டில்கள் பறிமுதல்
தேனி அல்லிநகரத்தில் காரில் மதுபானம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
தேனி அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பின்னதேவன்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு அருகில், காா் ஒன்று நின்று கொண்டிருந்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது காருக்குள் 2 பேர் இருந்தனர். இதையடுத்து போலீசார் காரில் சோதனை செய்தனர்.
அதில் அட்டை பெட்டிகளில் 285 மதுபான பாட்டில்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வடுகப்பட்டி தேவர் தெருவை சேர்ந்த சிவனாண்டி (வயது 32), முருகன் (42) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.