கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-02 19:15 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் சுற்றி வந்தனர். அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட சிங்கம்புணரி போலீசார் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக கூறினார்கள். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பரிசோதித்த போது விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 14 கஞ்சா பாக்கெட்டுகள் கிடைத்தன.

இதையடுத்து நடுவனூர் நல்லான் மகன் சுந்தர் (வயது 24), அதே ஊரைச் சேர்ந்த பெரியய்யா மகன் வினோத்குமார் (36) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்