சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் கைது

சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-15 09:24 GMT

திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் மசூதி தெருவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் (வயது 22), ஒண்டிக்குப்பம் ஆறுமுகம் தெருவை சேர்ந்த வினோத்குமார் (30) ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 2 பேரையும் பிடிக்க முயன்றபோது அவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி மிரட்டல் விடுத்தனர்.

போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 420, 4 செல்போன்கள், 4 கால்குலேட்டர்கள், சூதாட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு பில்லிங் எந்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்