பவானிசாகர் வனப்பகுதியில் புள்ளிமான்களை வேட்டையாடிய 2 பேர் கைது
பவானிசாகர் வனப்பகுதியில் புள்ளிமான்களை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.;
பவானிசாகர்
பவானிசாகர் வனப்பகுதியில் புள்ளிமான்களை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
வனத்துறையினர் ரோந்து
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பவானிசாகர் பகுதியில் வனச்சரகர் சிவகுமார் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வரப்பள்ளம் என்ற பகுதியில் சென்றபோது அங்குள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையில் புதர்களுக்கு அடியில் 2 பேர் மறைந்திருந்தனர்.
வனத்துறையினரை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து ஓடினார்கள். உடனே அவர்களை வனத்துறையினர் துரத்தி சென்று பிடித்து விசாரித்தனர்.
மான்கள் வேட்டை
விசாரணையில் அவர்கள் பவானிசாகர் குடில் நகரை சேர்ந்த ஓதிச்சாமி (வயது58), தினேஷ்குமார் (46) ஆகியோர் என்பதும், இவர்கள் சுருக்கு கம்பி வைத்து வனப்பகுதியில் 2 புள்ளிமான்களை வேட்டையாடியதும், பின்னர் அதன் இறைச்சிகளை விற்பனைக்காக வைத்து இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மான் இறைச்சிகள், 2 மான் தலைகள், மானின் கால்கள் மற்றும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட சுருக்கு கம்பி, வெட்டு அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.