விவசாயியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
விவசாயியிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கி மகன் பெருமாள் (வயது 40). இவர் நேற்று முன்தினம் நாகன்குளம் விலக்கில் வந்து கொண்டிருந்த போது, கடம்போடுவாழ்வு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் பேச்சிமுத்து (25), சிங்கிகுளத்தை சேர்ந்த மாடசாமி மகன் செந்தில்குமார் (44) ஆகியோர் அவரை வழிமறித்து செலவுக்கு ரூ.200 தரும்படி கேட்டனர். அதற்கு பெருமாள் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.100-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேச்சிமுத்து, செந்தில்குமாரை கைது செய்தனர்.
இதேபோல் திருக்குறுங்குடி சாலைத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (71). இவர் சாலை தெருவில் வந்து கொண்டிருக்கும் போது, நம்பிதலைவன் பட்டயம் கீழத்தெருவை சேர்ந்த சின்னமணி மகன் முருகேசன் (38) அவரை வழிமறித்து செலவுக்கு பணம் தரும்படி கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த முருகேசன் அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி, அவரிடமிருந்து ரூ.100-ஐ பறித்து சென்றார். இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசனை தேடி வருகின்றனர்.