மசாஜ் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
சென்னை முகப்பேர் அருகே மசாஜ் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை முகப்பேர் அடுத்த பாடி தேவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24). சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்ட நபர்களின் ஆசை வார்த்தையை நம்பி அதே பகுதியில் உள்ள மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்ய சென்றார். அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பல் ஹரிகரனை மிரட்டி, ஆன்லைன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரத்தை பறித்தனர். இதுபற்றி ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22) மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த பரத்குமார் (21) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.