காண்டிராக்டரிடம் பணம் கேட்ட 2 பேர் கைது
கத்தியை காட்டி மிரட்டி காண்டிராக்டரிடம் பணம் கேட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னய்யா (வயது 57). கட்டிட காண்டிராக்டர். நேற்று காலை இவர், அதே பகுதியில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தீத்தாம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் (30), பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த தண்டபாணி (43) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் சின்னய்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னய்யா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து சின்னய்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், தண்டபாணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.