பெண்ணை மிரட்டி பணம் கேட்ட 2 பேர் கைது

பெண்ணை மிரட்டி பணம் கேட்ட 2 பேைர போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-19 19:32 GMT

சிவகாசி, 

விருதுநகர் கூடல்நகரில் வசித்து வரும் விக்னேஷ் மனைவி ரம்யலட்சுமி (வயது 21) என்பவர் வேலாயுதம் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவகாசி ஏ.வி.டி. தெற்கு தெருவை சேர்ந்த கண்ணன் (35), ரமணப்ரியன் (36) ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி ரம்யலட்சுமியிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் கூச்சல் போட்டதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணன், ரமணப்ரியன் ஆகியோரை பிடித்து சிவகாசி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்