தூத்துக்குடியில்வாலிபரை செங்கலால் தாக்கிய 2 பேர் கைது
தூத்துக்குடியில் வாலிபரை செங்கலால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
புதுக்கோட்டை காமராஜ் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் மேகலிங்கம் (வயது 31). சம்பவத்தன்று இவர் புதுக்கோட்டை கூட்டாம்புளி பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே வந்து கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த சிவஞானபுரம் பகுதியை சேர்ந்த பொன் சுடலை மகன் யோகராஜ் (23), சுந்தரவேல் மகன் பாலசேகர் (29) ஆகிய 2 பேரும் மேகலிங்கத்தை வழிமறித்து தகராறு செய்து அவரை செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து மேகலிங்கம் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் வழக்குப்பதிவு செய்து யோகராஜ், பாலசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.