தொழிலாளிகளை தாக்கிய 2 பேர் கைது
பாளையங்கோட்டை அருகே தொழிலாளிகளை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி உடையார்குளத்தை சேர்ந்தவர் உச்சிமாகாளி (வயது 30). மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (60). இவர்கள் 2 பேரும் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள்.
இவர்கள் அரியகுளம் ரோட்டில் தண்ணீர் தொட்டி அருகே பாலாஜி நகரில் உள்ள காலிமனையில் ஆட்டுக்கிடை அமைத்து பார்த்து வந்துள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் உச்சிமாகாளி, பரமசிவம் ஆகியோரிடம் திம்மராஜபுரத்தை சேர்ந்த மாயாண்டி (22), கோட்டூரை சேர்ந்த அன்சாரி (20) ஆகிய இருவரும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டு கம்பால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உச்சிமாகாளி பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து மாயாண்டி, அன்சாரி ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.