அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது

அருமனை அருகே அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது

Update: 2023-01-03 19:46 GMT

அருமனை, 

மார்த்தாண்டத்தில் இருந்து மஞ்சாலுமூடு வழியாக முக்கூட்டுகல்லுக்கு நேற்று முன்தினம் ஒரு அரசுபஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் வெட்டுவிளையை சேர்ந்த கனகராஜ்(வயது 48) என்பவர் கண்டக்டராகவும், ரெஜிகுமார்(44) டிரைவராகவும் பணியில் இருந்தனர். அந்த பஸ் அருமனை அருகே முக்கூட்டுகல் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென பஸ்சை வழிமறித்து கண்டக்டர் கனகராஜிடம் தகராறு செய்து தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அவர் அருமனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக கனகராஜ் அருமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நாரதங்களை பகுதியை சேர்ந்த ராஜூ என்ற செல்வராஜ், ஜினேஷ், நந்து, ஹைலூசர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இதில் நந்து, ஹைலூசர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்