ரெயில்வே ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

ரெயில்வே ஊழியரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-21 19:37 GMT

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் முடுக்குப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 38). இவர் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பொன்மலை ரெயில்வே பகுதியில் பணியில் இருந்தார். அப்போது அங்கு 3 பேர் ரெயில்வே தண்டவாள பகுதியில் சுற்றித்திரிந்தனர். இதைக்கண்ட சிவக்குமார் அவர்களை தட்டிக்கேட்டார். அப்போது அவரை இரும்புக்கம்பியால் தாக்கினர். இது குறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த இளையராஜா (39), திருநாவுக்கரசு (21), பீமநகர் கூனிபஜாரை சேர்ந்த வீரமுத்து (28) ஆகியோர் சிவக்குமாரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து திருநாவுக்கரசு, வீரமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இளையராஜாவை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்