பெண் போலீசிடம் தகராறு செய்த 2 பேர் கைது
பெண் போலீசிடம் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ஆற்காடு
பெண் போலீசிடம் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் குடியிருப்பவர் அன்பரசி (வயது 35), ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரிகிறார். இவர், திமிரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது சாலையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டிருந்த 2 வாலிபர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்கள், அன்பரசிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி, அன்பரசி கையில் இருந்த செல்போனை பிடுங்கி கீழே வீசியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட திமிரியை அடுத்த ராம்பாளையம் பகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 22) மற்றும் 19 வயதுடைய வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.