மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் கைது

மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-06-30 18:08 GMT

திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் உள்ளிட்ட போலீசார் கொறுக்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை வழிமறித்து விசாரித்தபோது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 150 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் நாகை வ.உ.சி. தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது45), மருந்து கொத்தாள தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்