ஆதிதிராவிடர், பழங்குடியினர் 1,950 பேருக்கு கணினி பட்டா -கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் 1,950 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

Update: 2023-02-04 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் 1,950 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விடுதிகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் விடுதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவிகளுக்காக 23 விடுதிகளும், பள்ளி மாணவர்களுக்காக 27 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்காக ஒரு விடுதியும், கல்லூரி மாணவர்களுக்காக 2 விடுதிகளும், ஐ.டி.ஐ. மாணவர்களுக்காக ஒரு விடுதியும் என மொத்தம் 54 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் சுமார் 1,404 மாணவியரும், 1,453 மாணவர்களும் தங்கி படித்து வருகின்றனர். அனைத்து விடுதி மாணவர்களுக்கும் மிகவும் தரமான உணவு வகைகள் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறது.

கணினி பட்டா

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் 1,950 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டு உள்ளது. தையல் எந்திரம் இயக்க தெரிந்த சான்று பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன பெண்களுக்கு அரசு விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான மக்கள் பயன் பெற்று உள்ளனர். தொடர்ந்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்