லோடு ஆட்டோ கவிழ்ந்து 19 பெண்கள் படுகாயம்

ஒரத்தநாடு அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 19 பெண்கள் படுகாயம் அடைந்தனர்;

Update: 2023-08-10 20:34 GMT

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 19 பெண்கள் படுகாயம் அடைந்தனர்

கோவிலுக்கு சென்றனர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 20 பெண்கள் மற்றும் 14 வயதுடைய சிறுவன் ஆகிய 21 பேர் ஆத்திக்கோட்டை கிராமத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு நேற்று முன்தினம் லோடு ஆட்டோவில் சென்றனர்.

இந்த லோடு ஆட்டோவை தொண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றார்.

ஆட்டோ கவிழ்ந்து 19 பேர் படுகாயம்

ஆட்டோ கண்ணுகுடி நால்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லோடு ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லோடு ஆட்டோவில் சென்ற 19 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் காயம் அடைந்த பெண்களை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதில் சந்திரா (வயது50), ஜெயலட்சுமி (36), சசிகலா (50) உள்ளிட்ட 5 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்