திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.19 லட்சம்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.19 லட்சம் கிடைத்தது.

Update: 2023-05-19 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமியநாராயண பெருமாள் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட இந்த கோவிலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த மாசி மக தெப்பத்திருவிழாவையொட்டி மார்ச் 15-ந்தேதி உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது ரூ.14 லட்சத்து 69 ஆயிரத்து 879 கிடைத்தது. அதைத்தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் சித்திரை தேர் திருவிழாவும் நடைபெற்று நிறைவு பெற்ற நிலையில் நேற்று மீண்டும் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் தேவஸ்தான மேலாளர் இளங்கோவன், கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் நிரந்தர உண்டியலில் ரூ.17 லட்சத்து 9 ஆயிரத்து 442-ம், தற்காலிக உண்டியலில் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 189-ம் என மொத்தம் ரூ.19 லட்சத்து 25 ஆயிரத்து 637-ம், தங்கம் தோடு, சிமிக்கி, தங்க காசாக 25 கிராமும், வெள்ளி விளக்குகளாக 875 கிராமும் கிடைக்கப் பெற்றன. மேலும் இந்த உண்டியல் எண்ணும் பணியில் காரைக்குடி சஷ்டி சேவா குழுவினர் மற்றும் தேவஸ்தான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்