மக்கள் தொடர்பு முகாமில் ரூ.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

ஆக்கூர் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

Update: 2023-05-10 18:45 GMT

திருக்கடையூர் :

ஆக்கூர் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

மக்கள் தொடர்பு முகாம்

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார்,வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் காந்திமதி வரவேற்றார்.

முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள், தங்களது துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் மூலம் எவ்வாறு பயன்பெறுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினர்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகைக்கான ஆணை, பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டி தையல் எந்திரம் மற்றும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை சார்பில் உபகரணங்கள் என 124 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் நல உதவிகள் வழங்கினார்.

முன்னதாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி வேல்முருகன், ராஜ்கண்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரமேஷ் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள், சுகாதாரத் துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்