ரூ.19¼ கோடியில் கிராம தார்சாலை பணிகள்
கந்திலி ஒன்றிய பகுதிகளில் ரூ.19¼ கோடியில் கிராம தார்சாலை பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.;
கந்திலி ஊராட்சி ஒன்றியம் சுந்தரம்பள்ளி கிராமத்தில் பிரதம மந்திரி சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சுந்தரம்பள்ளி முதல் நத்தம் காலனி வரையும், சின்னாரம்பட்டி ஊராட்சி, தோரணபதி முதல் மைக்காமேடு வரை ரூ55 லட்சத்திலும், கொரட்டி ஊராட்சி தண்டுக்கானுர், மோழிகடை மங்கலப்பள்ளி வரை ரூ.1 கோடியே 44 லட்சத்திலும், மட்றப்பள்ளி ஊராட்சி, காடவல்லி ஏரி மேற்கத்தியானூர் புதுப்பட்டி வரை ரூ.2 கோடியே 12 லட்சத்திலும், ஜவ்வாது மலையில் மேலூர் யாம சாலை, சின்னவட்டானூர் கிராம சாலை என ரூ.19 கோடி 33 லட்சம் செலவில் கிராம தார் சாலைகள் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணியை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, தேவராஜ் ஆகியோர் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்து பேசினார்கள்.
நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் வக்கீல் கே.ஏ.குணசேகரன், டி.முருகேசன், கே.எஸ்.ஏ. மோகன்ராஜ், ஒன்றியக் குழு தலைவர்கள் திருமதி திருமுருகன், விஜயா அருணாச்சலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, பிரபாவதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரங்கசாமி குமார், மேனகா விவேகானந்தன், கருணாநிதி, சுகுமார், சண்முகம், மஞ்சுளா பூபதி, லட்சுமி கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தா சண்முகம், உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.