சேலம் மாவட்டத்தில் 18,678 பேர் குரூப்-1 தேர்வு எழுதுகின்றனர்-கலெக்டர் கார்மேகம் தகவல்

சேலம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 678 பேர் குரூப்-1 தேர்வு எழுதுகின்றனர் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.;

Update:2022-11-19 04:07 IST

குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-1 தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் 18 ஆயிரத்து 678 பேர் குரூப்-1 தேர்வு எழுத உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 42 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 62 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுபவர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வரவேண்டும். தேர்வை கண்காணிப்பதற்காக 6 பறக்கும் படைகள், 16 கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பாளர்கள்

மேலும் தேர்வு கூடங்களை கண்காணிக்கவும், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சார்பு செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்