தமிழகத்தில் புதிதாக 183 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விவரம் பற்றிய தகவல்களை மருத்துவத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 183 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,91,226 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 47 பேர், செங்கல்பட்டில் 17 பேர் உள்பட 30 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் உள்ளது. அரியலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கரூர், தர்மபுரி, தென்காசி, பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரு நாளில் மட்டும் 386 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,50,645 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 38,048 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளாகி தற்போது 2 ஆயிரத்து 533 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.