ரூ.2¼ கோடியில் 18 அங்கன்வாடி கட்டிடங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2¼ கோடி மதிப்பில் 18 அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்படும் என மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.;

Update: 2023-01-07 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2¼ கோடி மதிப்பில் 18 அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்படும் என மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி குழுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலியபெருமாள், மாவட்ட ஊராட்சி செயலர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உதவி செயற்பொறியாளர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் கூறியதாவது:-

18 அங்கன்வாடி கட்டிடம்

மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பில் 18 அங்கன்வாடி கட்டிடம் கட்டப்படும். அதற்கான நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலையான கட்டிடப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசின் அனைத்து துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அதனை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அந்தந்த பகுதி மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்